×

9 ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது

கொள்ளிடம்: ஒன்றிய அரசு தரும் நிதியை ஊராட்சிகளுக்கு நேரடியாக வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஊராட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஊராட்சிகளுக்கு நேரடியாக வழங்காமல் ஒன்றிய அலுவலகம் மூலமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இதை கண்டித்து 16 ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று 9 ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் அருகே புத்தூர் என்ற இடத்தில் சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சீர்காழி டிஎஸ்பி. லாமேக் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். ஊராட்சி தலைவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், ஊராட்சி தலைவர்கள் புளியந்துறை நேதாஜி, உமையாள்பதி கிள்ளிவளவன், காட்டூர் வடிவேல், முதலைமேடு நெப்போலியன் ஆகியோரை போலீசார் தரதரவென இழுத்து சென்று வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். அப்போது முரண்டுபிடித்த உமையாள்பதி ஊராட்சி தலைவர் கிள்ளிவளவனின் தலையில் டிஎஸ்பி லாமேக் தட்டி ஏற்றினார்.

The post 9 ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : 9 ,Currency ,Dinakaran ,
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...